Reading Time: < 1 minute
Tamil Business Directory
பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கெல் வாங்சுக்குவுடன், ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோருடன் பேச்சுவார்தை நடத்தவுள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தையின் போது, இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.
பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கெல் வாங்சுக், நேற்று இரண்டு நாட்கள் பயணமாக இந்தியா வந்தடைந்தார்.
டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பளித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பின்னர் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘பூடான் மன்னரின் இந்திய பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான நெருக்கமான மற்றும் தனித்துவமான உறவுகளை மேலும் வலுப்படுத்தும்’ என பதிவிட்டுள்ளார்.




