Reading Time: < 1 minute

நாட்டுக்கு மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசி இன்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு விசேட விஜயம் மேற்கொண்டிருந்தார்

Tamil Business Directory

இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான இராஜ்ஜிய உறவுகளின் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதனை சிறப்பிக்கும் வகையில் பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த மரியாதைக்குரிய ரோயல் இளவரசி மற்றும் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் மூன்று நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளனர்.

அதன்படி இன்று மதியம் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் மேற்கொண்ட அதிதிகள் யாழ்ப்பாண நூலகத்தில் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளைச் சந்தித்திருந்தார்.

மேலும் இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய ஆன் இளவரசி மற்றும் அவரது கணவர் ஆகியோர் நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.