Reading Time: < 1 minute
Tamil Business Directory
பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் மணித்தியால சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்த சம்பள அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி மாகாணத்தில் குறைந்தபட்ச மணித்தியால சம்பளம் 17.40 டொலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் குறைந்தபட்ச மணித்தியால சம்பளமாக 16.75 டொலர் வழங்கப்பட்டு வந்ததுடன் தற்பொழுது 3.9 வீத அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
நாட்டின் மிகவும் குறைந்த சம்பளம் வழங்கும் மாகாணமாக காணப்பட்ட பிரிட்டிஸ் கொலம்பியா தற்பொழுது கூடுதல் சம்பளம் வழங்கும் மாகாணமாக மாற்றமடைந்துள்ளது.
பணவீக்கத்தை ஈடு செய்யக்கூடிய வகையில் சம்பளம் அதிகரிக்கப்படுவதாக மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது.




