Reading Time: < 1 minute

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் பாலம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் காணாமல் போயிருந்தார்.

Tamil Business Directory

ட்ரக் வண்டியொன்று பாலத்தை உடைத்துக் கொண்டு நீரில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்கியாமோஸ் பகுதியில் அமைந்துள்ள RW Bruhn என்ற பாலத்தில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

ட்ரக் வண்டி பாலத்திலிருந்து சுமார் 60 அடி ஆழத்தில் கீழே விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வாகனத்தில் சாரதி மட்டும் பயணத்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தில் சிக்கிய சாரதியை இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.

தீயணைப்பு படையினர், மீட்பு பணியாளர்கள் போலீசார் உள்ளிட்ட பலரும் குறித்த சாரதியை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தினால் பாலத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து காரணமாக குறித்த பாலத்தின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.