Reading Time: < 1 minute
Tamil Business Directory
கம்லூப்ஸில் நான்கு பேர் பயணித்த காரை மோதிவிட்டு தப்பிச் சென்ற, பிறிதொரு வாகனத்தின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முதலாவது அவென்யூ மற்றும் பற்றில் வீதிப் (Battle Street) பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1:40 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது நான்கு பேர் பயணித்த காரும், பிக்கப் ரக வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் காரில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இருவர் உயிராபத்தான காயங்களுடன் அண்மையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இவ்விபத்துக் குறித்து கம்லூப்ஸ் பொலிஸார், தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




