Reading Time: < 1 minute
Tamil Business Directory
நயகராவில் நபர் ஒருவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அண்மையில் நயகராக சென் கதரீன்ஸ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
திட்டமிட்ட அடிப்படையில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
டெனியல் டேல் என்ற நபருக்கு எதிராக இவ்வாறு கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவத்துடன் மற்றுமொருவர் தொடர்புபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் குறித்த நபர் தொடர்பிலான தகவல்கள் இருந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.




