Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் வெற்றிடமாகும் தொழில் அமைச்சர் பதவிக்கு ஸ்டீவன் மேக்கினன் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
தொழில் அமைச்சர் பதவியை வகித்து வந்த சீமோஸ் ஓ றீகன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார்.
லிபரல் அரசாங்க அமைச்சரவையில் இருந்து தாம் பதவி விலகுவதாக றீகன் அறிவித்திருந்தார்.
இந்த பதவி வெற்றிடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் மெக்கினனை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான ஓர் பதவி கிடைத்தமை மகிழ்ச்சி அளிப்பதாக மெக்கினன் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக றீகன் கட்சிக்கும் மக்களுக்கும் வழங்கி வந்த சேவைகளுக்கு நன்றி தெரிவிப்பதாக றீகன் குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு தொடர்ச்சியாக சேவையை வழங்க தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
லிபரல் கட்சிக்குள் பல்வகைமையான கொள்கைகள் எப்போதும் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.




