Reading Time: < 1 minute
Tamil Business Directory
கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதாரத்தை மீட்பது போன்ற சவால்களைச் சமாளிக்க, புதிய அமெரிக்க நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற தயார் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதியளித்துள்ளார்.
கனேடிய பிரதமர் ஒரு உத்தியோகபூர்வ அறிக்கையில், அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதற்கு கனடா அரசாங்கத்தின் சார்பாக நான் வாழ்த்துகிறேன் என்று கூறி தனது வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது, உட்சேர்த்தலையும் பன்முகத்தன்மையையும் ஊக்குவித்தல் மற்றும் உள்நாட்டிலும் உலகெங்கிலும் ஜனநாயகம், அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பங்களிப்பு செய்வது பற்றியும் அவர் பேசினார்.




