Reading Time: < 1 minute

கனடாவின் ரொறன்ரோவில் தெற்காசிய சமூகத்தை தூற்றும் வகையில் அச்சுறுத்தல் விடுத்த நபர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

Tamil Business Directory

குறித்த நபர் கத்தியுடன் தெற்காசிய சமூகத்தவர்களை அச்சுறுத்தினார் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த குற்ற செயலுடன் தொடர்புடைய நபரை பொலிஸார் தேடி வருவதாகவும் அந்த நபரின் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

ரொறன்ரோ மேற்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு அச்சுறுத்தலுக்கு உள்ளானவர்கள் பொலிஸார் சம்பவம் குறித்து முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பொலிஸார் சந்தேக நபரை கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சில இடங்களில் குறித்த நபர் இவ்வாறு தெற்காசிய சமூகத்தை வெறுப்புணர்வு அடிப்படையில் கடுஞ்சொற்களால் திட்டி உள்ளதாகவும் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு போலீசார் கோரியுள்ளனர்.