Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவமொன்றில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தென்மேற்கு ஒன்றாரியோவின் அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பிக்அப் ரக வாகனமொன்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் 51 வயதான ஆண் ஒருவரும், 52 வயதான பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.




