Reading Time: < 1 minute

கனடாவில் தீ விபத்தில் சிக்கிய பூனைகளை காப்பாற்ற முயற்சித்த 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

ஒன்றாரியோவின் மொடொன்ட் பகுதியில் கட்டிடமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குப்பை தாங்கியொன்றில் ஏற்பட்ட தீ விபத்து அருகாமையில் உள்ள வீடு ஒன்றிற்கும் பரவியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வீட்டில் ஒர் பகுதி பூனைகள் காப்பகமாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குப்பைத் தொட்டி தீப்பற்றிக் கொண்ட போது வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தீப்பற்றிக் கொண்ட கட்டிடத்தில் இருந்த பூனைகளை மீட்பதற்கு சில முயற்சித்த போது, புகை காரணமாக அவர்கள் சுவாசப் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர்.

தீ விபத்தில் சிக்கியவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் எவருக்கும் உயிராபத்து கிடையாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.