Reading Time: < 1 minute

கனடாவின் வின்னிபெக் நகரில் தவறான திசையில் சென்ற வாகனத்தை நிறுத்திய போலீசார், 24,000 டொலர்களுக்கும் அதிகமான பெறுமதி உடைய போதைப்பொருள்களை கைப்பற்றியுள்ளனர்.

Tamil Business Directory

வெள்ளிக்கிழமை அதிகாலை 12.37 மணியளவில் சேர்புருக் வீதி பகுதியில் ஒரு வாகனம் தவறான திசையில் பயணித்தது கவனிக்கப்பட்டது. உடனடியாக வாகனம் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்போது 35 வயதுடைய ஓட்டுநர் மீது முன்பே பரோல் இடைநீக்கம் மற்றும் சட்டவிரோதமாக வெளியில் இருந்தது தொடர்பான பிடிவிராந்துகள் இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும், அவர் மதுபானம் அல்லது போதைப்பொருள் தாக்கத்தில் வாகனம் ஓட்டியிருந்ததும் தெரியவந்தது.

  • 99.6 கிராம் கிராக் கோகெயின்
  • 196 கிராம் தூள் கோகெயின்
  • 11 கிராம் மெத்தாம்பெட்டமின்
  • 11 Xanax மாத்திரைகள் போன்ற பொருட்கள் சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்டதாகவும், இவற்றின் சந்தைப் பெறுமதி மொத்தம் சுமார் 24,560 டொலர் மதிப்புள்ள போதைப்பொருள்களை கைப்பற்றினர்.

அதோடு 3,382 கனடிய டொலர் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. சம்பவத்திற்குப் பின்னர், குறித்த நபர் மீது போதைப்பொருள் குற்றங்கள், மது/போதை நிலையில் வாகனம் ஓட்டுதல், போலீஸ் உத்தரவுகளை பின்பற்றாதது,குற்றம் மூலம் பெற்ற சொத்துகளை வைத்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சந்தேக நபர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.