Reading Time: < 1 minute

கனடாவில் தனது பிள்ளைகளை கடத்திய பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் கார்லிங்டன் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது 3 மகன்களையும் இந்தப் பெண் கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த பெண் கடந்த 2023 ஆம் ஆண்டு தனது மூன்று மகன்களையும் கடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த வாரம் சஸ்கட்ச்வான் பகுதியில் வைத்து குறித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

டர்ஹம் பிராந்திய பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்ட்ரிட் மரியேன் ஷில்டர் என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவர்களை கண்டுபிடிப்பதற்கு போலீசார் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போன சிறுவர்கள் நூறு நாட்களுக்குப் பின்னர் மீட்க மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கடத்தல் சம்பவத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.

கடத்தல் மற்றும் நீதிமன்ற உத்தரவினை மீறியமை ஆகிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்தப் பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.