Reading Time: < 1 minute
Tamil Business Directory
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பிற்கு விசம் கலந்த கடிதமொன்றை அனுப்பி வைத்த கனடிய பெண்ணுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கியூபெக்கைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இவ்வாறு 22 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
56 வயதான பெஸ்கெல் ஃபெரியர் என்ற பெண்ணே தண்டிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டில் கனடிய – அமெரிக்க எல்லைப் பகுதியில் குறித்த பெண் கைது செய்யப்பட்டிருந்தார்.
வீட்டில் தயாரிக்கப்பட்ட விச வகையொன்றை தூவி, டொனால்ட் ட்ராம்பிற்கு எச்சரிக்கை கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.




