Reading Time: < 1 minute

கனடாவின் மவுண்ட் டெனிஸ் (Mount Dennis) பகுதியில் கடந்த வார இறுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 15 வயது சிறுவன் ஜகாய் ஜாக் (Jahkai Jack) என போலீசார் அடையாளம் தெரிவித்துள்ளார்.

Tamil Business Directory

டொரொன்டோ நகரத்தின் இவ்வாண்டின் 14வது கொலைச் சம்பவத்தின் பலியாகக் பதிவு செய்யப்பட்டுள்ளார்.

சனிக்கிழமை இரவு, புட்டன்வுட் Buttonwood மற்றும் சார்ல்டன் செட்டில்மன்ட் Charlton Settlement வீதிகள் சந்திப்பில், ஜாக் தனது இரண்டு நண்பர்களுடன் இருந்தபோது இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக, சாட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குற்றவாளி சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றதாக கூறியுள்ளதுடன், தற்போது வரை அவருடைய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

துப்பாக்கிச்சூட்டு பின்னணி தொடர்பாகவும் காரணம் தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.