Reading Time: < 1 minute

கனடாவின் டொரொன்டோ நகரில், வில்சன் அவென்யூ மற்றும் பெவர்லி ஹில்ஸ் டிரைவ் அருகே இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Tamil Business Directory

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், கத்தியால் காயமடைந்த இரண்டு நபர்களை மீட்டதாகவும் அவர்கள் இருவரும் 50-வது வயதில் உள்ள ஆண்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் ஒருவருக்கு உயிர் ஆபத்தான நிலை ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.

மற்றொரு நபர் உயிருக்கு ஆபத்தில்லாத நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக 70 வயதுடைய ஒருவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதல் நிகழ காரணம் மற்றும் கைது செய்யப்பட்ட நபருக்கும் காயமடைந்தவர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தினால் மக்களுக்கு ஆபத்து எதுவும் இல்லை.

மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்கள் எவரும் தப்பியோடவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.