Ashkan Pournasir-Roudbane is the city's 16th homicide victim of 2025
Reading Time: < 1 minute

கனடாவின் டொரொண்டோ நகரின் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Tamil Business Directory

டொரொண்டோ போலீசார் இந்த சம்பவம் பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவம், டான்ஃபோர்த் மற்றும் ஹில்லிங்டன் அவென்யூவுகளுக்கு அருகிலும், காக்ஸ்வெல் அவென்யூ அருகாமையில் உள்ள பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

ஒரு 20 வயதுக்கு உட்பட்ட இளைஞர் கத்திக்குத்தில் படுகாயமடைந்த நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

எனினும், தீவிர சிகிச்சை அளித்தும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் குறித்து குறைந்த தகவல்களையே போலீசார் வெளியிட்டுள்ளனர்.

சந்தேகநபர் சுமார் 5 அடி 5 அங்குல உயரமுள்ள சாந்தமான உடலமைப்புடைய ஆணாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை தற்போது நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.