Reading Time: < 1 minute

கனடாவின் அமைந்துள்ள வியாபார நிலையம் ஒன்றின் மீது இரண்டு தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

Tamil Business Directory

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. விட்பி பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தர்ஹம் பிராந்திய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் வாகனம் ஒன்றில் சென்று வர்த்தக நிலையம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த வர்த்தக நிலையத்தின் மீது கடந்த 22 ஆம் திகதியும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த பகுதியில் இருந்து துப்பாக்கித் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன. சிசிடிவி காணொளி பதிவுகள் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைக்கப்பெற்றால் 888-579-1520, ext. 1905 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.