Reading Time: < 1 minute

ரொறன்ரோவின் ஒன்றாரியோ நதியில் நீந்தி கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

Tamil Business Directory

38 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வட கிழக்கு ஒன்றாரியோவில் அமைந்துள்ள டுவின் நதி பகுதியில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

நீரில் மூழ்கியது தொடர்பில் தகவல் கிடைக்கப்பெற்றதும் மீட்பு பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து குறித்த நபரை மீட்டுள்ளனர்.

நீரில் மூழ்கிய நபரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த நீரில் மூழ்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் உள்ளூரை சேர்ந்த ஒருவர் என போலீசார் தெரிவிக்கின்றனர்.