Reading Time: < 1 minute

டொரன்டோவில் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

நாளைய தினம் எரிபொருட்களின் விலைகள் வீழ்ச்சி அடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

தேங்க்ஸ் கிவிங் அல்லது நன்றி அறிதல் வார இறுதியில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடிய மலிவு எரிசக்தி வள நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

டொரன்டோ பெரும்பாக பகுதியில் பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 6 சதத்தினால் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஏழு மாதங்களில் அதிக அளவில் எரிபொருள் விலை குறைவடையும் சந்தர்ப்பமாக இது கருதப்படுகின்றது.

கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 149.9 சதங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி டொரன்டோவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 173.9 சதங்களாக பதிவாகி இருந்ததுடன், கடந்த 2022 ஆம் ஆண்டில் எரிபொருளின் விலை 214.9 சதங்களாக காணப்பட்டது.