Reading Time: < 1 minute

டொரண்டோவில் உள்ள நார்த் யோர்க் பகுதியில் உள்ள வைர நகை கடையில் பிற்பகலில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக, ஐந்து சந்தேகநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tamil Business Directory

மாலை 5 மணியளவில், யோங்க் வீதியில் ஸ்டீல்ஸ் அவென்யூ அருகே உள்ள நகை கடையில் கொள்ளை நடந்ததாக பொலிஸாருக்கு அழைப்பு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடையின் காட்சி பெட்டிகளை குறித்த கும்பல், ஆயுதங்களை பயன்படுத்தி உடைத்து, நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.

நகை கடையில் கொள்ளை

சம்பவத்தின் போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் ஒரு வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.

ஆனால், ஸ்டீல்ஸ் அவென்யூ ஈஸ்ட் மற்றும் வில்லோடேல் அவென்யூ அருகே அந்த வாகனம் விபத்துக்குள்ளானது.

விபத்தின் பின்னர், சந்தேகநபர்கள் வாகனத்தை விட்டு நடையாய் தப்பி ஓடியுள்ளனர். சந்தேகநபர்கள் குறித்த விளக்கமான விவரங்கள் எதுவும் தற்போது வெளியாகவில்லை.

இதுதொடர்பான தகவல்களை உடனுக்குடன் பொலிசாருக்கு வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.