Reading Time: < 1 minute
Tamil Business Directory
டொரண்டோ நகரில் உள்ள ஸ்கார்பரோ பகுதியில் உள்ள ஒரு கடையை துப்பாக்கியுடன் கொள்ளையிட முயன்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டு, பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4:40 மணியளவில், ஷெப்பர்ட் அவென்யூ ஈஸ்ட் மற்றும் மார்கம் சாலைக்கு அருகே இடம்பெற்றுள்ளது.
ஒரு நபர் கடைக்குள் நுழைந்து, துப்பாக்கியை காண்பித்து பணத்தை கேட்டு மிரட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யும் நேரத்தில் சந்தேகநபரிடமிருந்து துப்பாக்கி, கத்தி, போதைப்பொருள் மற்றும் குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் டொரண்டோவைச் சேர்ந்த 35 வயதான டேனியல் பெர்டாப்சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.




