Reading Time: < 1 minute

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட “கனடாவை 51வது மாநிலமாக்க வேண்டும்” என்ற கருத்து, கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான நட்பை அவமதிக்கும் வகையிலானது என ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட்,தெரிவித்தார்.

Tamil Business Directory

நாங்கள் அமெரிக்க ஆளுநர்களை சந்தித்தபோது, அவர்கள் பலரும் இது குறித்து பேசினர். ‘இது உங்கள் நெருக்கமான நண்பருக்கு அவமதிப்பானது’ என குறிப்பிட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அமெரிக்காவை நேசிக்கிறோம். ஆனால் ஒரே ஒரு நபரான டிரம்ப் தான் இச்சிக்கலை உருவாக்குகிறார் என குற்றம் சுமத்தியுள்ளார்.

இது மாற்றி வெளிச்சத்துக்குள் வரவேண்டும். அவரிடம் fence-mending (உறவுகளை சீரமைத்தல்) செய்யும் நெறி தேவை” என்றும் ஃபோர்ட் கூறினார்.

தற்போது ஃபோர்ட் மற்றும் பிற மாநில முதல்வர்கள் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஆளுநர்களை சந்தித்து வர்த்தகம் மற்றும் வரி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் பங்கேற்ற சில அமெரிக்க ஆளுநர்கள், கனடா-அமெரிக்க வர்த்தக போர் காரணமாக, கனடிய சுற்றுலா பயணிகளின் வருகை கடுமையாக குறைந்துள்ளதை பெரும் கவலையுடன் தெரிவித்தனர்.

டிரம்பின் கருத்துக்கள் இருந்தாலும், அமெரிக்க ஆளுநர்களும் கனடிய முதலமைச்சர்களும் நல்லுறவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக ஃபோர்ட் தெரிவித்தார்.