Reading Time: < 1 minute

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஜஸ்பர் காட்டுத்தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை சந்தித்துள்ளார்.

Tamil Business Directory

அல்பர்ட்டாவின் ஹின்டோன் பகுதிகளுக்கு பிரதமர் விஜயம் செய்துள்ளார்.

ஜாஸ்பர் காட்டு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் தொடர்பில் பிரதமருக்கு அதிகாரிகள் விலக்கியுள்ளனர்.

வரலாறு காணாத அளவிற்கு பாரிய அளவை காட்டு தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

ஜாஸ்பர் பகுதியின் ஏற்பட்ட காட்டு தீ காரணமாக பாரிய அளவு சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் ட்ரூடோ மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

காட்டுத்தீ ஏற்பட்டுள்ள ஜஸ்பர் பகுதிகளுக்கு பிரதமர் செல்ல மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜாஸ்பர் பகுதியை மீள கட்டியெழுப்புவதற்கு மத்திய அரசாங்கம் உதவிகளை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும் மக்கள் தொழில் வாய்ப்புகளை இழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.