Reading Time: < 1 minute

கனடாவில் சூடான் நாட்டு பிரஜைகளுக்கு விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

சூடான் பிரஜைகள் தங்களது வீசா காலத்தை நீடித்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சூடானில் நிலவி வரும் வன்முறை நிறைந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கனடாவின் குடிவரவு அமைச்சர் சீன் ப்ரேசர் இது தொடர்பில் அறிவித்துள்ளார்.

கனடாவில் வாழ்ந்து வரும் அல்லது கனடாவில் தங்கி இருக்கும் சூடான் பிரஜைகள் இலவசமாகவே தங்களது விசா காலத்தை நீடித்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சூடான் பிரச்சனைகளுக்கு தொழில் அனுமதி வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூடானில் சிக்கியிருந்த 375 கனடியர்களை அரசாங்கம் இதுவரை மீட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது