Reading Time: < 1 minute

ரொறன்ரோவில் சிறார்கள் உட்பட பல மீது பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த இளைஞரால் பாதிக்கப்பட்டவர்கள் பொலிசாரை நாடவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

அக்டோபர் 1 மற்றும் 2ம் திகதிகளில் யார்க் தெருவில் அமைந்துள்ள ஹொட்டல் வளாகத்தில் புகுந்து குறித்த இளைஞர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்திற்கு பின்னர் 10 நாட்கள் கடந்த நிலையில், ரொறன்ரோ தீவு படகு முனையத்தில் அதே இளைஞர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளதும் பொலிஸ் விசாரணையில் உறுதியாகியுள்ளது.

இதில் ஆண் ஒருவர் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டது. இந்த நிலையிலேயே இந்திய வம்சாவளி இளைஞரான 24 வயது பிரசன்னா மண்டல் (Prasanna Mondal) என்பவர் ரொறன்ரோ பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.

அவர் மீது துஸ்பிரயோக வழக்குகள் பதியப்பட்டு அக்டோபர் 13ம் திகதி காணொளி மூலம் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். ஆனால், அதன் அடுத்த நாள் மீண்டும் அவர் துஸ்பிரயோக வழக்கில் சிக்கியுள்ளார்.

இந்த முறை சிறார்கள் அவரிடம் சிக்கியுள்ளதாக தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக மண்டல் கைது செய்யப்பட்டு அக்டோபர் 15ம் திகதி மீண்டும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார்.

குறித்த இளைஞரால் பாதிக்கப்பட்டவர்கள் பல இருக்கலாம் எனவும், அவர் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் பொலிசாரை நாடவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.