Reading Time: < 1 minute

சிரியாவிலிருந்து கனடா திரும்பிய இரண்டு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

சிரிய தடுப்பு முகாமில் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பெண்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பெண்கள் இருவருக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்கள் எதுவும் இதுவரை முன்வைக்கப்படவில்லை.

எனினும் பயங்கரவாத குற்றச் செயல்களின் அடிப்படையில் குறித்த பெண்ணுக்கு எதிராக முன்னெச்சரிக்கையை நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிரியாவின் வடகிழக்கு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு பெண்களும் பத்து சிறுவர்களும் கனடா நோக்கி வருகை தந்தனர்.

இவ்வாறு கனடாவிற்கு வந்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்தப் பெண்கள் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டிருக்கின்றார்களா என்பது குறித்து விசாரணை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.