Reading Time: < 1 minute

அமெரிக்காவைச் சேர்ந்த தந்தை ஒருவரும் மகனும் இரண்டு நாட்கள் பயணம் செய்து கனடாவிற்கு வந்துள்ளனர்.

Tamil Business Directory

வாகமொன்றில் இந்த இருவரும் பயணம் செய்துள்ளனர். எனினும், இவர்கள் கனடா வருவதற்கான காரணம் விநோதமானது.

கனடாவில் மட்டும் கிடைக்கக் கூடிய சிப்ஸ் வகை ஒன்றை கொள்வனவு செய்யும் நோக்கில் தொலைதூரத்திலிருந்து கனடா வந்துள்ளனர்.

பிரபலமான உருளைக் கிழங்கு சிப்ஸ் வகையொன்றை கொள்வனவு செய்வதற்காக தந்தையும் மகனும் ஜீப் வண்டியில் கனடா வந்துள்ளனர்.

லைபர்மேன் என்ற அமெரிக்கப் பிரஜையும் 15 வயதான ஜேகொப் என்ற அவரது மகனும் இவ்வாறு கனடா வந்துள்ளனர்.

15 வயதான ஜேகொப் செவிப்புலனற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மகனை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் தாம் இந்த பயணத்தை மேற்கொண்டதாகவும், 40 பக்கட்டுகளை வாங்கியதாகவும் லைபர்மேன் தெரிவித்துள்ளார்.