Reading Time: < 1 minute

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே (Surrey) பகுதியைச் சேர்ந்த ‘லூயிஸ்’ (Louis) என்ற பூனை, தற்போது ஒரு உள்ளூர் ஜாம்பவானாகவும், இணையதள நட்சத்திரமாகவும் மாறியுள்ளது.

Tamil Business Directory

இதற்குக் காரணம், சர்வதேச எல்லைச் சட்டங்களைச் சிறிதும் கருத்திற் கொள்ளாது அது தினசரி கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உலா வருவதே ஆகும்.

‘லூயிஸ் உய்ட்டன்’ (Louis Vuitton) எனப் பெயரிடப்பட்ட இந்தப் பூனை, இரு நாடுகளையும் பிரிக்கும் ஒரு சிறிய அகழியை (Ditch) மிகச் சாதாரணமாகத் தாண்டிக் குதித்து தினசரி எல்லை கடக்கிறது.

இந்தப் பகுதியில் வேலிகள் எதுவும் இல்லை என்றாலும், அதிநவீன கெமராக்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் எஸ்.யு.வி (SUV) வாகனங்களில் ரோந்து செல்லும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் 24 மணிநேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இத்தனை பாதுகாப்புகளையும் கண்டு அஞ்சாத லூயிஸ், கூலாக எல்லை தாண்டிச் சென்றுவிட்டுத் தனக்குத் தேவையான போது மீண்டும் கனடாவுக்கே திரும்பி விடுகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.