Reading Time: < 1 minute
Tamil Business Directory
ரொறொன்ரோ பாடசாலையில் அதிகமான கொவிட்-19 தொற்றுக்கள் இருப்பதால் டான்வுட் பார்க் பொதுப் பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதனால், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தற்காலிகமாக வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பாடசாலையில் தொற்று கண்டறியப்பட்டதையடுத்து முழு மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.
ரொறொன்ரோ பப்ளிக் ஹெல்த் அறிக்கையின்படி, ரொறொன்ரோ மாவட்ட பாடசாலை சபை, பாடசாலை சமூகத்திற்கு அறிவித்துள்ளது. குடும்பங்கள் சோதனை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றன.




