Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 25ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tamil Business Directory

அண்மைய புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் ஒரு இலட்சத்து 25ஆயிராயிரத்து 534பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 766பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 11பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 45ஆயிரத்து 415பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 228பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், பத்தாயிரத்து 653பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 86பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.