Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, கடந்த 24 மணித்தியாலத்தில் 279பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 30பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 19ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 1 இலட்சத்து 2,242பேர் பாதிப்படைந்ததோடு, 8,484பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும், 28,667பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 65,091பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 2,058பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.