Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, ஒரு மாதத்திற்கு பின்னர் குறைந்த அளவில் பதிவாகியுள்ளது.

Tamil Business Directory

கடந்த 24 மணித்தியாலத்தில், கொரோனா வைரஸ் தொற்றால், 60பேர் உயிரிழந்ததோடு, 1,070பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதிக்கு பின்னர் (46பேர்) மிக குறைந்த அளவிலான உயிரிழப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

இதற்கமைய உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,842ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 78,072ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 33,002பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 39,228பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 502பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.