Reading Time: < 1 minute

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக, யோர்க் பிராந்தியத்தில் இரண்டு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

Tamil Business Directory

உட்ரிட்ஜில் உள்ள ‘அவர் லேடி ஒஃப் பாத்திமா கத்தோலிக்கத் ஆரம்பபாடசாலை, கிங் நகரத்தில் உள்ள ‘ஹோலி நேம் கத்தோலிக்கத் ஆரம்பபாடசாலை’ ஆகியவை ஒக்டோபர் 26ஆம் திகதி வரை மூடப்படும் என்று யோர்க் கத்தோலிக்க மாவட்ட பாடசாலை சபை (ஒய்.சி.டி.எஸ்.பி) உறுதிப்படுத்தியுள்ளது.

தனிப்பட்ட கற்றலுக்காகப் பதிவுசெய்யப்பட்ட மாணவர்கள் வகுப்புக்குத் திரும்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறுதிசெய்யப்பட்ட 8 கொவிட் -19 தொற்றுகளை அவார் லேடி ஒஃப் பாத்திமா கத்தோலிக் ஆரம்பபாடசாலை மற்றும் 5 நேர்மறை தொற்றுகளை ஹோலி நேம் கத்தோலிக் ஆரம்ப பாடசாலை பட்டியலிடுகிறது.