இந்த கோடை காலத்தில் கனடாப் பயணிகளை மாநிலத்திற்கு வருமாறு அமெரிக்காவின் கெலிஃபோர்னியா மாநில ஆளுநர் கேவின் நியூசம் (California Gov. Gavin Newsom) அழைப்பு விடுத்துள்ளார்.
ஆளுனர் கேவின் புதிய சர்வதேச சுற்றுலா பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்.
வர்த்தக உரையாடல்கள், சுங்கவரி சர்ச்சைகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை ஆகியவை காரணமாக, அமெரிக்கா நோக்கி பயணிப்பதைத் தவிர்க்கும் கனடாப் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது.
இந்த சூழ்நிலையில், குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கெலிஃபோர்னியா கெலிவாஷிங்டனில் இருந்து 2000 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. ஹாலிவுட் சின்னம், ‘வாக் ஆஃப் ஃபேம்’, கடற்கரைப் புல்வெளிகள், திராட்சைத்தோட்டங்கள் என பல ஆண்டுகளாகவே கனடாப் பயணிகளின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாக கெலிஃபோர்னியா இருந்துள்ளது.
எனினும், இவ்வாண்டு அதன் நிலைமை மாறிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பில், 70 சதவீத கனடாப் பயணிகள் இந்த வருடம் அமெரிக்காவிற்குச் செல்ல விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர்.
மேலும், மார்ச் மாதத்தில், அமெரிக்க எல்லை வழியாக காரில் பயணிக்கும் கனடாப் பயணிகள் எண்ணிக்கை 32 சதவீதம் குறைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவை “51வது மாநிலம்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டதும், கனடா மீது விதித்த புதிய சுங்க வரிகள் விதிக்கப்பட்டமையும் கனடிய பயணிகள் வீழ்ச்சிக்கான காரணமாக கருதப்படுகின்றது.




