Reading Time: < 1 minute

கனடாவில், குடிபோதையில் மணிக்கு 235 கிலோ மீற்றர் வேகத்தில் வாகனத்தைச் செலுத்திய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணம் செய்ய வேண்டிய பாதையில் குறித்த நபர் 135 கிலோ மீற்றர் கூடுதல் வேகத்தில் பயணம் செய்துள்ளார்.

நோர்த் யோர்க் பிராந்தியத்தின் லெஸ்லி வீதிக்கு அருகாமையில் அமைந்தள்ள 401ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாகனத்தை செலுத்திய சாரதி யார் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

குடிபோதையில் வாகனம் செலுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக குறித்த சாரதியின் அனுமதிப்பத்திரம் 90 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.