Reading Time: < 1 minute
Tamil Business Directory
சந்தேக நபர் ஒருவரை கைது செய்யச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
கியூபெக் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் சேவையில் இருபது ஆண்டுகள் அனுபவம் உடைய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்தி கொன்ற சந்தேக நபரை, சகல பொலிஸ் உத்தியோகத்தர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி கொன்றுள்ளனர்.
மொன்றியலில் இருந்து 100 கிலோ மீற்றர் தொலைவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 35 வயதான நபர் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




