Reading Time: < 1 minute

கனடாவின் கியூபெக் மாகாண அரசாங்கத்திற்கும் பொதுத்துறை தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.

Tamil Business Directory

தற்காலிக அடிப்படையில் இந்த இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் நான்கரை லட்சம் பொதுத்துறை ஊழியர்களை பிரதிநிதித்துவம் செய்யும் தொழிற்சங்கங்களுடன் இவ்வாறு இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது.

கியூபெக்கின் மொன்றியலில், அரசாங்கத்திற்கும் ஊழியர் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் தொழிற்சங்கங்கள் கடந்த நவம்பர் மாதம் முதல் பல்வேறு கட்டங்களில் வேலை நிறுத்தப் போராட்டங்களை முன்னெடுத்தது.

எனினும் இன்னமும் சுமார் ஒன்றரை லட்சம் சுகாதார மற்றும் ஆசிரிய தொழிற்துறை ஊழியர்களுடன் அராங்கம் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.