Reading Time: < 1 minute

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராடடத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர்.

Tamil Business Directory

சுமார் 65000 பாடசாலை ஆசிரியர்கள் இவ்வாறு வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்க உள்ளதாகத் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 23ம் திகதி இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் தொழிற்சங்க கூட்டத்தில் வேலை நிறுத்தம் மேற்கொள்ளும் திகதி குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் அரசாங்கத்திற்கு வலுவான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் நிச்சயமாக பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கியூபெக் மகாhண பள்ளிக்கூட ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் மோசமாக பாதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.