Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் காணாமல் போயிருந்த முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த நபரின் சடலம் பெட்டிஸ்கேன் நதியின் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
டெபி புயல் காற்று காரணமாக குறித்த பகுதியில் மழை வெள்ளம் மற்றும் பலத்த காற்று ஏற்பட்டு இருந்த நிலையில் குறித்த நபர் காணாமல் போயிருந்தார்.
காணாமல் போயிருந்த முதியவர் மறுநாள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் வேறும் வழிகளிலும் குறித்த நபரை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இறுதியில் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரணத்திற்கான காரணம் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.




