Reading Time: < 1 minute

வின்னிபெக்கில் காணாமல் போன ஒருவரைக் கண்டுபிடிக்க பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

Tamil Business Directory

கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் தென்பட்ட 30 வயதான ஷான் ஹால், இந்த மாதத்தில் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

இவர் இறுதியாக வின்னிபெக்கின் செயின்ட் போனிஃபேஸ் பகுதியில் காணப்பட்டதாக பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் சராசரியாக ஆறு அடி உயரம் கொண்டவரெனவும், பழுப்பு நிற முடி மற்றும் பழுப்பு நிற கண்கள் கொண்டவரெனவும் பொலிஸார் விவரிக்கின்றனர்.

ஹாலின் நல்வாழ்வில் அக்கறை கொண்டுள்ளோர் இவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள், வின்னிபெக் பொலிஸ் சேவை, காணாமல் போன நபர்கள் பிரிவைத் தொடர்புக் கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.