Reading Time: < 1 minute

கனடாவைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர் அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த விடயத்தில், புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Tamil Business Directory

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த பைப்பர் ஜேம்ஸ் (19) என்னும் இளம்பெண் சுற்றுலா சென்றிருந்த நிலையில், அவுஸ்திரேலியாவின் Fraser Island என்னும் K’gari என்னுமிடத்திலுள்ள கடற்கரை ஒன்றில் அவர் சுயநினைவின்றிக் கண்டெடுக்கப்பட்டார்.

பொலிசாருடன் மருத்துவ உதவிக்குழுவினரும் அங்கு விரைந்த நிலையிலும், அவரைக் காப்பாற்ற இயலவில்லை, சிறிது நேரத்திற்குள் அவர் உயிரிழந்துவிட்டார்.

அவர் விழுந்து கிடந்த இடத்தில், அவரைச் சுற்றி dingoes என அழைக்கப்படும் 12 காட்டு நாய்கள் நின்றதால், அவர் அந்த நாய்களால் கொல்லப்பட்டாரா என கேள்வி எழுந்தது.

இந்நிலையில், பைப்பர் ஜேம்ஸ், காட்டு நாய்கள் தாக்கித் துரத்தியதால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக தற்போது நீதிமன்ற விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

பைப்பரின் உடலில், அவர் உயிரிழப்பதற்கு முன் ஏற்பட்ட காயங்களும், அவர் உயிரிழந்தபின் ஏற்பட்ட காயங்களும் இருந்தன.

ஆக, அந்த காட்டு நாய்கள் அவரைத் தாக்க, அவர் கடலுக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என முன்பே கருதப்பட்டது.

தற்போது, நீதிமன்ற விசாரணை அதிகாரியின் அறிக்கையிலும் அது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.