Reading Time: < 1 minute

காசாவில் கனடிய பிரஜை ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tamil Business Directory

குறித்த கனடிய பிரஜை கத்தி ஒன்றை வைத்து இஸ்ரேலிய படையினரை மிரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய போலீசார் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

இஸ்ரேலிய படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் குறித்த நபர் கத்தியைக் காண்பிடித்து மிரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து படையினர் குறித்த கனடிய பிரஜை மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான குறித்த கனடிய பிரஜை. சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இஸ்ரேலிய எல்லைக்குள் பிரவேசித்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

எவ்வாறு எனினும் குறித்த நபர் ஒரு கனடிய பிரஜை என இஸ்ரேல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றுமை தெரிய வந்துள்ளதாகவும் இது குறித்து தகவல்கள் திரட்டப்படுவதாகவும் கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.