Reading Time: < 1 minute

போர் இடம்பெற்று வரும் காசாவில் சிக்கியிருந்த மேலும் 234 கனடியர்கள் பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர்.

Tamil Business Directory

கனடிய வெளிவிவகார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது கனடிய பிரஜைகள் மற்றும் கனடிய நிரந்தர வதிவிட உரிமையாளர்கள் இவ்வாறு காசாவை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 234 கனடியர்கள் ராஃபா எல்லை பகுதி வழியாக எகிப்தை சென்றடைந்துள்ளனர்.

கனடாவுடன் தொடர்புடைய அனைவருக்கும் காசாவை விட்டு வெளியேறுவதற்கு இதுவரையில் அனுமதி வழங்கப்படவில்லை கனடிய பிரஜைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் கட்டம் கட்டமாக அனுமதி வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டவர்கள் ராஃபா எல்லை வழியாக எகிப்தை சென்றடைந்துள்ளனர்.