Reading Time: < 1 minute

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் கூடுதல் வரி விதிப்புகள், கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதாக மிரட்டல் ஆகிய விடயங்களால் அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளார்கள் கனேடியர்கள்.

Tamil Business Directory

ஆனால், அதற்கு தடையாக நிற்கின்றன சில விடயங்கள்! அதாவது, உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருட்களை வாங்க கனேடியர்கள் விரும்புகிறார்கள்.

ஆனால், அவற்றின் விலை அதிகமாகிக்கொண்டே செல்கிறது.

இருந்தாலும், விலை அதிகமானாலும் தங்கள் நாட்டிலேயே தயாராகும் பொருட்களை வாங்கும் ஆர்வம் மக்களிடையே அதிகமாகிவருகிறது.

சமீபத்திய ஆய்வொன்றில் பங்கேற்ற கனேடியர்களில் 63 சதவிகிதம் பேர், தங்கள் உணவு எங்கிருந்து வருகிறது என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ளும் பட்சத்தில், அவற்றிற்கு அதிக விலை கொடுக்கவும் தயார் என்று கூறியுள்ளார்கள்.

ஆக, மக்களுடைய விருப்பம் மற்றும் அவர்களுடைய வாங்கும் தன்மை ஆகிய இரண்டு விடயங்களுக்குமிடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதற்காக, சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் பங்கு முயற்சிகளில் இறங்க, உணவு உற்பத்தி செய்பவர்களோ, விலைகளைக் குறைக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார்கள்.