Reading Time: < 1 minute

கனடாவில் நபர் ஒருவருக்கு கனவில் தோன்றிய இலக்கங்களைக் கொண்டு லொத்தர் சீட்டிலுப்பில் விளையாடி பணப்பரிசு வென்றெடுத்துள்ளார்.

Tamil Business Directory

ஒன்றாரியோ மாகாணத்தின் பர்லிங்டன் பகுதியையைச் சேர்ந்த மைக்கல் டேய்லர் என்ற 50 வயதான ட்ரக் சாரதியே இவ்வாறு பணப்பரிசு வென்றெடுத்துள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளாக இவர் லொத்தர் சீட்டிலுப்பு விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இறந்த தனது தந்தை கனவில் தோன்றியதாகவும் அவர் கூறிய இலக்கங்களைக் கொண்டு லொத்தர் சீட்டு விளையாடியதாகவும் தெரிவித்துள்ளார்.

லொத்தர் சீட்டிலுப்பில் டெய்லர் ஒரு லட்சம் டொலர் பணப்பரிசு வென்றெடுத்துள்ளார்.

இந்த லொத்தர் சீட்டிலுப்பு வெற்றி பெரு மகிழ்ச்சியை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.