Reading Time: < 1 minute

சீனா, கனடிய சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிக நோக்கில் செல்வோருக்கான வீசா (Visa) கட்டாயத்தை நீக்குவதாக அறிவித்துள்ளது.

Tamil Business Directory

இந்த முடிவு, பீஜிங்குடன் உறவை மேம்படுத்த முயன்றுவரும் கனடா பிரதமர் மார்க் கார்னி மேற்கொண்ட நடவடிக்கைகளின் பின்னர் வெளியாகியுள்ளது.

இன்றைய தினம் முதல் கனடியர்கள் 30 நாட்கள் வரை சீனாவில் தங்க வீசா பெற தேவையில்லை.

இந்த சலுகை குறைந்தது இந்த ஆண்டின் இறுதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை, பெரும்பாலான கனடியர்கள் சீனாவின் பிரதான நிலப்பரப்பிற்குள் நுழைய நீண்ட விண்ணப்ப செயல்முறையையும், சுமார் 140 அமெரிக்க டொலர் கட்டணத்தையும் செலுத்த வேண்டியிருந்தது.

ஆனால் ஹொங்கொங் , மாக்கு மற்றும் ஹைனான் மாகாணத்துக்கு வீசா இன்றி செல்ல முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அறிவிப்பால் தனது வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாக கனடிய பயண முகவர் நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.

வீசா விண்ணப்பம் நீண்டதும் சிக்கலானதுமாக இருந்தது. விமான டிக்கெட், ஹோட்டல் முன்பதிவு, குடும்ப விவரங்கள் போன்ற பல ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், சீனாவில் பயணச் செலவுகள் அதிகமாக இருப்பதால் உடனடியாக கனடிய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பினை எதிர்பார்க்க முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.