Reading Time: < 1 minute

கனடிய பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களை உள்ளிருக்கும் நடவடிக்கையில் வீழ்ச்சியை பதிவாகியுள்ளது.

Tamil Business Directory

கனடிய மத்திய அரசாங்கம் வெளிநாட்டு மாணவர்கள் உள்ளீர்ப்பை வரையறுக்கும் வகையில் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதன் அடிப்படையில் அனேகமான பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் உள்ளீர்ப்பு குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் வெளிநாட்டு மாணவர்களை உள்ளீர்ப்பது குறைக்கப்படும் என குடி வரவு அமைச்சர் அறிவித்திருந்தார்.

வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

வீடமைப்பு, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை வழங்குவதில் நிலவும் நெருக்கடி நிலை நாள் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

அரசாங்கத்தின் புதிய கொள்கை காரணமாக வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் 35% வீழ்ச்சி அடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்து இந்த எதிர்வு கூறல் வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்கம் எதிர்வு கூறியதை விடவும் மாற்றம் அதிகமானது என கனடிய பல்கலைக்கழகங்களின் தலைவர் கேப்ரியல் மில்லர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் எண்ணிக்கை வரையறையானது மாணவர்கள் மத்தியில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.