Reading Time: < 1 minute

கனடாவின் பழங்குடியின சமூகங்கள் வாழும் பகுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

Peawanuck பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் தீ விபத்து பதிவாகியுள்ளது இந்த விபத்தில் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் இரண்டு வயது வந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மெஷ்ன வெப் அஸ்கி காவல் போலீசார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பதுடன் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் பற்றிய விபரங்களும் வெளியிடப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.