Reading Time: < 1 minute

கனடா நோவா ஸ்கோட்டியாவின் ஹலிபக்ஸ் பிராந்தியத்தின் டர்ட்மவுத் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

Tamil Business Directory

போர்ட்லாண்ட் வீதிக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவத்தில் 27 வயதான பெண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த குறித்த பெண்ணுக்கு உயிராபத்து கிடையாது என வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் காரணமாக பொதுமக்களுக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு காரணமாக குறித்த வீதி மூடப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் தகவல்கள் ஏதேனும் தெரிந்தால் அது குறித்து அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.